வவுனியா இனப்படுகொலைக்கு ஆதரவா!

வவுனியா இனப்படுகொலைக்கு ஆதரவா!

வவுனியாவில் இன்றைய தினம் இனப்படுகொலையை கண்டித்தும் படைகொலை செய்யப்பட்ட பொதுமக்கள்,போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மே18ஐ தமிழ் தேசிய துக்க தினமாக அறிவித்து உலக தமிழர்கள் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வபூர்வமாக அனுஷ்டித்து வருகின்றனர்

எனினும் வவுனியா மாநகரம் இதற்கு எதிராக உள்ளது போல் தென்படுகிறது காரணம் நேற்றைய தினம் வடமாகாண முதலமைச்சரின் வேண்டுகோளுக்கினங்க வவுனியா வர்த்தகர் சங்கம் சகல வர்த்தக நிலையங்களையும் அரை நாள் கடையடைப்பு செய்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்குமாறு சகல வர்த்தகர்களையும் கேட்டுக்கொண்டது எனினும் இன்று பெரும்பாண்மையான தமிழ் வர்த்தக நிலையங்கள் திறந்து காணப்படுவதுடன் அதிகமான இஸ்லாமியர்களின் கடைகளும் திறந்து காணப்படுகிறது இது எதை எடுத்துக்காட்டுகிறது..?

1. தமிழர்களாகினும்,இஸ்லாமியர்களாயினும் முள்ளிவாய்க்கால் படுகொலையை மறந்து விட்டார்களா? அல்லது படுகொலை இடம்பெற வேண்டிய ஒன்று என ஆதரவளிக்கின்றனரா..?

2.வடமாகண முதலமைச்சர் அவர்கள் வவுனியா மண்ணை புறக்கணிப்பு செய்வது போல் அவரின் செயற்பாடு உள்ளதென்று வவுனியாவில் பலரின் மத்தியிலும் மனதில் எழும் கேள்வி ஒன்றும் உள்ளது..!

காரணம் கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டமாக இருப்பினும், பொருளாதார வர்த்தக மையத்திற்கான போராட்டமாக இருப்பினும்,அரச,தனியார் பேருந்துகாரர்களின் போராட்டமாக இருப்பினும்,நிலமீட்பு போராட்டமாக இருப்பினும்,சுகாதார ஊழியர்களின் போராட்டமாக இருப்பினும் சரி இது போல இன்னும் பல போராட்டங்கள் வவுனியாவில் நடை பெற்ற போதிலும் முதலமைச்சர் அவர்கள் அதனை கண்டு கொள்ளவும் இல்லை நேரில் வந்து பார்த்ததும் இல்லை, ஆனால் வவுனியாவில் இடம்பெற்ற பல திறப்பு விழாக்களில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது..? அவர் சில வேளை உணரவில்லை போல வவுனியாவும் வடமாகாணத்தில் தான் உள்ளது என்பதை..?

கொழும்பில் அதிகம் இருந்ததனால் வடமாகாணம் என்பது தனியே யாழ்ப்பாணம் மட்டும் தான் என நினைத்துவிட்டார் போல..? எனவே முதலமைச்சர் மேல் உள்ள வெறுப்பில் முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்து வர்த்தகர்கள் கடைகளை திறந்துள்ளனரா..?

3.கடந்த காலங்களில் வர்த்தக சங்கத்தினுள் இருக்கும் முரண்பாடுகள் காரணமாக அல்லது பேருந்து நிலைய வர்த்தகர்களுக்கும் வர்த்தக சங்கத்தினருக்குமிடையில் இருந்த கருத்து முரண்பாடுகள் காரணமாக வர்த்தக சங்கத்தின் மேல் இருந்த கோபத்தால் வர்த்தகர்கள் வர்த்தக சங்கத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனரா..?

இதேவேளை வர்த்தக சங்கத்தின் தலைவர் அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

4.இதேவேளை கடந்த நாட்களில் நாடு முழுவதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளை கண்டித்து வவுனியாவில் பள்ளிவாசல் நிர்வாகம் வர்த்தக சங்கத்திடம் கடையடைப்பு ஒன்றை நடாத்துமாறு கோரிக்கை விடுத்து அதை வர்த்தக சங்கம் ஏற்காததினால் அதன் பின்விளைவாக இன்று இஸ்லாமியர்களின் கடைகள் திறந்துள்ளனவா(2009ல் முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது பள்ளிக்கு முன் பட்டாசு கொழுத்தி இராணுவத்தின் வெற்றியை இவர்கள் கொண்டாடியிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய விடயமாகும்)

5.வவுனியாவை பொருத்தவரையில் கடந்த காலங்களில் கடையடைப்பை அதிகமாக வர்த்தக சங்கம் மேற்கொண்டதினால் அதிகமான வர்த்தகர்கள் பெரிதும் பாதிப்படைந்ததுடன் பல வர்த்தகர்கள் கடும் எதிர்ப்புக்களை கடையடைப்புக்கு காட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

எதுவாக இருப்பினும் உலக தமிழர்கள் அனைவரும் முள்ளிவாய்க்கால் தினத்தை தமிழர்களின் துக்க தினமாக அனுஷ்டிக்கும் வேளை இன்றைய தினம் வவுனியாவில் மாத்திரம் வர்த்தக நிலையங்கள் இவ்வாறு வழமை போல் இயங்குவதென்பது அனைவரும் சிந்திக்க வேண்டி விடயமாகும்

எதிர்காலங்களில் இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்து தமிழர்களாகிய நாம் ஓர் தாய் வயிற்றுப்பிள்ளை என்பதை நிருபிக்க வேண்டும் எனவே இதற்குறிய வழிமுறைகளை கண்டறிந்து தீர்க்கமாக ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுடன் முதலமைச்சர் வவுனியாவிற்கு ரிபன் வெட்டுவதற்காக மட்டும் சமூகம் தராது அனைத்து பிரச்சனைகளுக்கும் ஓரளவாகினும் நேரில் சமூகம் தந்து பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்பது பலரின் கருத்தாக உள்ளது

முதலமைச்சர் அவர்களே தங்களை தமிழர்களாகிய நாம் ஆதரிக்கின்றோம் எனவே வவுனியாவையும் வன்னியையும் சற்று உங்கள் கருத்திலெடுத்து செயற்படுவதன்மூலம் காலாகாலத்திலும் நீங்கள் அவர்கள் மத்தியில் நிலைத்து நிற்பீர்கள் என்பது உண்மை!

(நன்றி – தமிழ் தேசிய செய்திகள்)

 

Facebook Comments