கார் பள்ளத்தில் வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்ட் மாநிலத்தின் சாம்பவத் மாவட்டம் சவாலா பகுதிதியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை கார் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

பித்தோரராகர் – தனக்பூர் வீதியின் சவாலா பகுதியில் கார் சென்றுகொண்டிருந்த போது வீதியின் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்ததாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments