ராகுல் காந்தி தேசப்பற்று இல்லாதவர்!

ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல் காந்தி கூறுகின்றமையானது,அவர் தேசப்பற்று இல்லாதவர் என்பதை எடுத்துக் காட்டுவதாக, பாரதிய ஜனதா கட்சியின்தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ. என்ற இந்திய ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ளவர்களை மன்னித்து விட்டதாக,ராகுல் காந்தி சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து குறிப்பிட்டிருந்தார். ராகுல் காந்தியின் இந்த மென்மைப்போக்கு சந்தேகத்தை உருவாக்கி இருக்கிறது.

ஒரு நாட்டின் பிரதமர் கொல்லப்பட்டமைக்காகவே அவர்களுக்கு இந்த தண்டனைவழங்கப்பட்டுள்ளதே தவிர, ராகுல் காந்தியின் தந்தை கொல்லப்பட்டமைக்காக அல்லஎன்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும் என்று சுப்ரமணியன் சுவாமிகுறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கைக்கு இந்திய அமைதி காக்கும் படையினரை அனுப்பியதாலேயே ராஜிவ் காந்திகொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகவே ராஜிவ்காந்தி இந்திய அமைதி காக்கும் படையினரை இலங்கைக்கு அனுப்பினார்.

எனவே இந்த கொலையில் பணம் தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments