ரஷ்ய விமானம் சிரியாவில் விபத்து! 39 பேர் பலி!

ரஷ்ய போக்குவரத்து விமானமொன்று சிரியாவின் கடலோர நகரமான லடாகியாவுக்கு அருகே உள்ள மெய்மிம் (Hmeimim) விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது.

விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 39 பேரும் உயிரிழந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சினை மேற்கோள்காட்டி ரஷ்ய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் விமானம் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்கான ஆதாரம் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை எனவும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் என்று ஆரம்பிக்க கட்ட விசாரணைத் தகவல்கள் கூறுகின்றன.

Facebook Comments