ரோசிவின் வீட்டு மலசலகூடத்திற்கு 57 இலட்சம் என்றால் பிரதமருக்கு?

ரோசிவின் வீட்டு மலசலகூடத்திற்கு 57 இலட்சம் என்றால் பிரதமரின் வீட்டு?

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர் ரோசி சேனாநாயக்க தனது வீட்டிலுள்ள மலசலகூடத்திற்கு 57 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார் என்றால், பிரதமரின் தனது வீட்டு மலசலகூடத்திற்கு எவ்வளவு ஒதுக்கியிருப்பார் என்று கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசண்ண ரணவீர கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது எரிபொருள் விலை, பஸ் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக மக்களுக்கு வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவின் வீட்டிலுள்ள மலசல கூடத்தை சீரமைக்க 57 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேயரின் மலசல கூடத்திற்கே இவ்வளவு தொகை என்றால் பிரதமரின் வீட்டு மலசலகூடத்திற்கு எவ்வளவு செலவாகும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Facebook Comments