ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது!

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இருந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார்.

தற்போது ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

பேரறிவாளனின் மனுவிற்கு எதிராக மத்திய அரசு வாதாடி வருகிறது.

இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளின் விடுதலை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ”ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை சட்டப்படி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சட்டத்திற்கு புறம்பாக எதையும் செய்ய முடியாது, சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Facebook Comments