பிரபாகரனுக்காக மனவேதனை வேதனையடைந்தேன்!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை தொலைக்காட்சியில் பார்த்த போது, மனவேதனை அடைந்ததாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரபாகரனின் மரணத்தை பார்த்த போது, “இலங்கை இராணுவத்தினர் ஏன் இவ்வளவு கொடூரமாக நடந்துகொண்டார்கள்” என எண்ணியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கபூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், முன்னாள் ஐ.ஐ.எம் மாணவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“ராஜீவ் காந்தி கொலையாளிகளை தாங்கள் மன்னித்துவிட்டோம். தனது தந்தை படுகொலை செய்யப்பட்டதை நினைத்து வேதனை அடைந்தோம்.

கொலையாளிகள் மீது நீண்ட காலமாக கோபத்தில் இருந்தோம். தற்போது கொலையாளிகளை முழுமையாக மன்னித்து விட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மரணத்தை தொலைக்காட்சியில் பார்த்தபோது இரு விடயங்களை நினைக்கத் தோன்றியது.

ஒன்று “இலங்கை இராணுவத்தினர் ஏன் இவ்வளவு கொடூரமாக நடந்துகொண்டார்கள்” என்பது. மற்றையது பிரபாகரனுக்காகவும் அவரது குழந்தைகளுக்காகவும் வேதனை அடைந்தேன்.

வன்முறையை தாண்டி பிரபாகரன் ஒரு மனிதர், அவருக்கும் குடும்பம் உள்ளது. அவருக்காக அவரது குழந்தைகள் அழுவர்கள். நான் இதுபோன்ற வலிகளை அனுபவித்திருக்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Facebook Comments