புதுக்குடியிருப்பில் 19 கிராம அலுவலர் பிரிவுகளிலும் மீள் குடியேற்றம்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 19 கிராம அலுவலர் பிரிவுகளிலும் தற்போது மீள் குடியேறியிருப்பதாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் அறிமுக உரையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் இதுவரை 13224 குடும்பங்களைச் சேர்ந்த 40326 பேர் மீள் குடியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 1729 பெண் தலைமைத்துவம் தாங்கும் குடும்பங்களும் 707 மாற்றுத்திறனாளிகளும் 156 வரையான வாழ்கைத் துணையை இழந்தவர்களும் அடங்குவதாக மேற்படி அறிமுக உரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments