ஈழத்து லொஸ்லியாவுக்கு அடித்த பேரதிர்ஷ்டம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து கலந்துகொண்டுள்ளவர் லொஸ்லியா. தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லொஸ்லியாவிற்கு திடீரென கிடைத்த அதிர்ஷ்டம் தான் பிக் பாஸ்

சின்ன சின்ன தவறுகள் செய்தாலும் அதில் இருந்து மீண்டு தனக்கான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் லொஸ்லியாவின் முதல் சாதனைப் பயணம் ஆரம்பமாகி உள்ளது.

ஏற்கனவே இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் வெளியே வாங்கள் உங்களுக்காக தமிழ் சினிமா காத்திருக்கிறது என் கூறினார். அதே போல் ராஜா ராணி இயக்குனர் பிரவீன் ராஜா ராணி பாகம் இரண்டில் லொஸ்லியாவை நடிக்க வைக்கப் போவதாக வெளிப்படையாக கூறினார்.

லொஸ்லியா தனது நண்பர்களிடம் அடிக்கடி சொல்லும் ஒரே விடயம் எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்பதாகும் தற்போது அது நடந்துள்ளது.

முதல் வெற்றியாக விக்கி பீடியா பக்கத்தில் லொஸ்லியா மரியநேசன் என்ற பெயர் பதிவாகி உள்ளது. லொஸ்லியாவிற்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்…வாழ்த்துக்கள் லொஸ்லியா.

Facebook Comments