சற்றுமுன் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி!

கொழும்பு கொட்டாஞ்சேனை சுமத்திராராம வீதியில் பிலிங் வத்தையில் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பழ வியாபாரிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் வீட்டுக்கு அருகில் உரையாடிக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் ரி.56 ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த, சமந்த பிரதீப், மிலான் மதுசங்க, ஜயரத்ன ஆகியோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த மூவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படுகாயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகி விட்டதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன

சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments