கிளிநொச்சியில் தேர்தல் வாக்களிப்பு 76 வீதமாக காணப்படுகிறது!

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளுராட்சி தேர்தல் வாக்களிப்பு 76 வீதமாக காணப்படுகிறது என கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலா் குறிப்பிட்டுள்ளார்.

நூறு வாக்களிப்பு நிலையங்களில் 86734 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கிளிநொச்சி கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளுக்கான வாக்களிப்புகளில் மக்கள் ஆர்வத்துடன் காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணி வரை வாக்களிப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

கிளிநொச்சியில் மிகமிக அமைதியான முறையில் வாக்களிப்பு நடந்து முடிந்துள்ளது எனத் தெரிவித்த மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்

மொத்தம் 57 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகிறது இதில் 17 நிலையங்கள் தபால் மூலம் வாக்களிப்பு நிலையங்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்

Facebook Comments