பரந்தனில் ஹயஸ் வாகனம் விபத்து!

பரந்தனில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ஹயஸ் வாகனம் பரந்தன் பூநகரி வீதியில் இன்று காலை விபத்துக்குள்ளானது.

வாகனத்தில் பயணித்த 4 பேர் காயமடைந்தனர்.

அவர்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments