இலங்கை வன்முறைகளுக்கு எதிராக ஜப்பானில் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு எதிராக ஜப்பான் வாழ் இலங்கையர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

டோக்கியோவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக இலங்கையின் தற்போதைய நிலவரத்தைத் தெரிவிக்கும் வகையில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் வாழ் இலங்கையர்கள் வன்முறைகளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை கண்டி மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் இடம்பெற்றுவரும் வன்முறை காரணமாக நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு, பெருமளவிலான பொலிஸார், விஷேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Facebook Comments