ஜம்மு ராணுவ முகாம் மீது தாக்குதல்! 10பேர் உயிரிழப்பு!

ஜம்மு மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரையில் ராணுவத்தினர் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) அதிகாலை ஜம்முவில் உள்ள ராணுவமுகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் நேற்றைய நிலவரப்படி மூன்று பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்தும் தாக்குதல் தொடர்பில் ஊடகமொன்று வெளியட்ட தகவலின்படி ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் உட்பட மொத்தம் 10பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான எல்லைப் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் காணப்படுகிறது.

இப்பகுதியில் தொடர்ந்தும் தீவிரவாதிகளின் ஊடுருவல் மற்றும் தாக்குதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில், நேற்று அதிகாலை ஜம்முவில் உள்ள ராணுவ முகாம் மீது திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

அத்தோடு ராணுவ முகாமிற்கு பின்புறத்தில் உள்ள குடியிருப்பு பகுதி மீதும் தீவிரவாதிகள் தாக்குதலை மேற்கொண்டதன் காரணமாக பொதுமக்களும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments