இந்திய அரசு பசுக்களுக்கு அடையாள அட்டை வழங்க தீர்மானம்!

இந்தியாவில் உள்ள பசுக்களுக்கு ஆதார் அட்டைபோன்ற அடையாள அட்டைகளை வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி முதல்கட்டமாக இந்தியாவில் உள்ள 4 கோடி பசுக்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கவும், இந்தத் திட்டத்திற்காக 50 கோடி இந்திய ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பசுக்கள் கடத்தப்படுதல், மற்றும் அதன் உரிமையாளர்கள் தாக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் பகுதிகளில் அதிகரித்து காணப்பட்டன.

இதன் காரணமாக பசுக்களுக்கும் ஆதார் அட்டை போன்று அடையாள அட்டை வழங்க பா.ஜ.க அரசு முடிவு செய்திருந்தது. அதேபோன்று பசுக்கள் கடத்தப்படுவதை தடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக நிபுணர்கள் குழுவை அமைத்து அறிக்கை சமர்க்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசிற்கு உத்தரவிட்டது.

அதன்படி பசுக்களுக்கு தனித்துவமான அடையாள அட்டையினை வழங்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரைகள் செய்யப்பட்டன.

இந்த நிலையில் தற்போது பசுக்களுக்கு தனி அடையாள அட்டையினை வழங்க மத்திய அரசு தீர்மானித்து அதற்கான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments