HUAWEI நிறுவனத்தின் NOVA 4 இலங்கையிலும் அறிமுகம்!

HUAWEI நிறுவனத்தின் NOVA 4 இலங்கையிலும் அறிமுகம்!

இலங்கையிலுள்ள ஸ்மார்ட் தொலைபேசி பாவனையாளர்களுக்கு உலகின் முதலாவது punch screen தொழில்நுட்ப தொலைபேசியை அறிமுகப்படுத்தும் HUAWEI நிறுவனம், HUAWEI NOVA 4 என்ற புரட்சிகரமான புதிய சாதனத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட் தொலைபேசி கறுப்பு மற்றும் நீல சாய்வு நிறங்களில் பாவனையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் இத்தொலைபேசியை நாடு முழுவதிலும் காணப்படுகின்ற அனைத்து HUAWEI அனுபவ மையங்கள், டயலொக் மற்றும் மொபிடெல் காட்சியறைகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

இதனை சந்தைப்படுத்தும் செயற்பாட்டில் சிங்கர் நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகின்றது.

மேலும் இத்தொலைபேசியில் பாரிய 6.4 அங்குல IPS LCD panel மற்றும் NOVA 4 இன் பின்புறமானது சாய்வு (gradient) நிறத்திலான வடிவமைப்பினைக் கொண்டுள்ளதுடன் விரல் அடையாள சென்சாரினையும் (finger print sensor version 4.0) கொண்டுள்ளமையே இதன் சிறப்பம்சங்களாகும்

Facebook Comments