கோத்தபாய மனு மீதான விசாரணை!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 22ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

மிதக்கும் ஆயுத கப்பல் வர்த்தகமொன்றை தனியாருக்கு நடத்திச் செல்ல அனுமதியளித்தமையினால் அரசாங்கத்திற்கு 114 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகத் தெரிவித்து கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைகளை தடுப்பது தொடர்பில் இடைக்கால தடையுத்தரவினை பிறப்பிக்குமாறு கோரி கோத்தபாய ராஜபக்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் நீதிபதி பிரிதி பத்மன் சூரசேன மற்றும் சிரான் குணரட்ன ஆகியோரைக் கொண்ட நீதிபதி குழாமினால் இந்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பணிப்பாளர்நாயகம் உள்ளிட்டவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

Facebook Comments