எந்தவொரு கட்சிக்கும் ஆதரவளிக்க தயார்!

உள்ளுராட்சி மன்றங்களில் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுள்ள கட்சி எதுவாக இருப்பினும் அவர்களுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாவும் எதிர்காலத்தில் அவர்களின் மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களுக்கம் ஆதரவளிக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஈ.பி.டி.பி. கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் பெரும்பாலானவற்றில் யாரும் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளாத நிலையில் வடக்கு கிழக்கில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ள ஈ.பி.டி.பி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

அத்துடன், யாழ். மாநகர சபை உட்பட சில சபைகளில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக ஈ.பி.டி.பி ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில் இந்த தீர்மானத்தினை அவர்கள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments