கனடா பிரதமரின் பாதுகாவலர் சென்ற வாகனம் விபத்து!

கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் பாதுகாவலர் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் பிரதமர் திரும்பிக்கொண்டிருந்த வேளை பிரமரது பாதுகவலர் பயணம் செய்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது கார் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் குறித்த கார் சாரதியான பெண்ணும் அவரது மகனும் மற்றும் பிரதமரின் பாதுகாவலர் ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்ததியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தினால் பிரதமரின் வாகனத்திற்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Facebook Comments