சற்றுமுன்னர் மட்டக்களப்பில் முஸ்லீம் வர்த்தகர் ஒருவரின் சடலம்!

சற்றுமுன்னர் மட்டக்களப்பு வாவிக்கரையை நோக்கி படையெடுக்கும் பொதுமக்கள் !!! முஸ்லீம் வர்த்தகர் ஒருவரின் சடலம் மீட்பு

(டினேஸ்)

காத்தாங்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி வாவிக்கரை பகுதியில் சடலம் ஒன்று கரையொதுங்கி உள்ளதையடுத்து பொதுமக்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக வினவியபோது,…….

காத்தாங்குடி கடற்கரை வீதியைச் சேர்ந்த எம்.ஏ.எம் முபாரக் வயது 32 கடந்த சில நாட்களாக காணாமல் போய்யிருந்துள்ளார் இது தொடர்பாக அவரது குடும்பத்தார் காத்தாங்குடி பொலீஸில் முறைப்பாடு செய்துள்ளனர் அந்தவகையிலேயே குறித்த வர்த்தகர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தாங்குடி பொலீஸார் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments