மனித உரிமைப் போராளி அஸ்மா காலமானார்!

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்கான ஐ.நா. நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்த அஸ்மா ஜஹான்கீர் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நாயகமாக நவநீதன் பிள்ளை செயற்பட்டிருந்த காலத்தில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

குறித்த நிபுணர் குழுவில் பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற சட்டத்தரணியும் ஆசியாவின் மிகச் சிறந்த மனித உரிமைப் போராளிகளில் ஒருவருமான அஸ்மா ஜஹான்கீர் உள்ளடக்கப்பட்டிருந்தார்.

அவரது குழுவினர் ஐ.நா. சபைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் இலங்கை அரசாங்கம் மற்றும் ராணுவத்தினரின் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தௌிவாக அறிக்கையிடப்பட்டிருந்தது.

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாட்டைக் கொண்டிருப்பதாக பின்னாளில் அவர் இலங்கையின் ஆங்கில ஊடகமொன்றுக்கும் சர்வதேச ஊடகங்கள் பலவற்றிலும் எழுதியிருந்தார்.

இந்நிலையில் தனது 66 வயதில் அஸ்மா ஜஹான்கீர் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருதய நோய் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது

Facebook Comments