12 ராசிக்காரர்களும் கடன் காறாரா? இதோ மந்திரம்!

12 ராசிக்காரர்களும் வீட்டில் பணம் வற்றாமல் இருக்க சொல்ல வேண்டியது லட்சுமி மந்திரங்கள்.

இன்றைய உலகில் பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதற்கு செல்வம் ஒரு முக்கிய தேவையாக உள்ளது.

ஆகவே செல்வத்தை தேடி ஓடிக் கொண்டே இருப்பதற்கான அவசியம் உள்ளது.

ஒவ்வொரு மனிதனும் தனது தேவை, விருப்பம் ஆகியவற்றை நிறைவேற்ற செல்வத்தை தேடி செல்கிறான். ஆனால் வெகு சிலரே அதனை அடைய முடிகிறது.

லக்ஷ்மி – குபேரர்
இந்து மதத்தில், லக்ஷ்மி தேவி செல்வத்தின் தொடக்கமாகவும், குபேரர் செல்வத்தை தொடர்ந்து வழங்குபவராகவும் அறியப்படுகிறார்கள். இவர்கள் இருவரையும் தொடர்ந்து பிரார்த்திக்கும்போது ஒருவருக்கு நீங்கா செல்வம் கிடைக்கிறது என்று நம்பப்படுகிறது.

லக்ஷ்மி தேவி
லக்ஷ்மி தேவியை வழிபடும்போது சில சக்தி மிக்க மந்திரங்களை ஜெபிப்பதால் சிறந்த பலன் கிடைக்கிறது என்று இந்து மத சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால் எல்லா மந்திரங்களும் எல்லா பக்தர்களுக்கும் பொருந்துவதில்லை.

ஜோதிடம்
ஜோதிடத்தின் படி, ஆளும் கிரகத்தை பொறுத்து, சில மந்திரங்கள் லக்ஷ்மி மந்திரத்தின் நேர்மறையான விளைவை மாற்றிக்கொள்ளலாம், இது வாழ்க்கையில் பிரச்சனை , நிதி இழப்புகள் மற்றும் வறுமை ஆகியவற்றிற்கு இட்டுச் செல்கிறது.

ஆகவே ஒவ்வொரு ராசிக்கும் ஒரு மந்திரம் உள்ளது. அதனை இப்போது காண்போம்.

மேஷ ராசி

மேஷ ராசிக்கான லக்ஷ்மி மந்திரம் இந்த மேஷ ராசிக்காரர்களுக்கு எல்லா வித மங்களமும் உண்டு. அவர்கள் மிகவும் வலிமையானவர்கள், குறிக்கோள் நிறைந்தவர்கள்.

மிகச் சிறியவற்றால் அவர்களை திருப்தி படுத்த முடியாது. நீங்கள் ஜெபிக்க வேண்டிய மந்திரம் – “ஸ்ரீம்” . இந்த புனிதமான வார்த்தையை 10008 முறை ஜெபித்தால் நிறைந்த செல்வம் பெருகும்.

ரிஷப ராசி

ரிஷப ராசிக்கான லக்ஷ்மி மந்திரம் ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் பொறுப்பானவர்கள். குடும்பம், சமூகம் மற்றும் சமுதாய பொறுப்புகளை தங்கள் தோளில் சுமக்கிறவர்கள்.

இவர்களுக்கான மந்திரம், ” “ஓம் சர்வபாதா வினிமுக்குடோ, தன் தியான்யா சுத்தன்வித்தா | மானுஷியோ மாப்ரபதேன் பிவிஷ்யதி நா சன்ஷயா ஓம்”

மிதுன ராசி

மிதுன ராசிக்கான லக்ஷ்மி மந்திரம் மிதுன ராசியினர் தங்கள் பொது அறிவால் சாதகமற்ற சூழ்நிலையையும் தன் வசம் மாற்றும் தன்மை உடையவர்கள்.

இயற்கையாகவே பிடிவாத குணம் கொண்டவர்கள், கடின உழைப்பாளி, அந்த ஒரு கஷ்டத்தையும் தாண்டி வருபவர்கள். உங்களுக்கான மந்திரம் – “ஓம் ஸ்ரிங் ஸ்ரியே நமஹா

கடக ராசி

கடக ராசிக்கான லக்ஷ்மி மந்திரம் ஒரு நேரம் மகிழ்ச்சியுடனும் அடுத்த நேரம் சோகமாகவும் இருக்கும் மனநிலைக் கொண்டவர்கள் கடக ராசியினர். உங்களுக்கான மந்திரம் – ஓம் மஹா லக்ஷ்மியை வித்மஹி விஷ்ணுப்ரியயை(விஷ்ணுபத்நித) தீமஹி தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்சிம்ம ராசிக்கான லக்ஷ்மி மந்திரம் சிம்ம ராசியினர் பயம் அற்றவர்கள், தைரியமானவர்கள், ஈகோ நிறைந்தவர்கள்.

அநீதிக்கு எதிராக நிற்பவர்கள். இதனால் இவர்களுக்கு நண்பர்களும் சொந்தங்களும் அதிகமானோர் இருப்பார்கள். உங்களுக்கான மந்திரம் – “ஓம் ஸ்ரீம் மகாலக்ஷ்மியே நமஹா ”

கன்னி ராசி

கன்னி ராசிக்கான லக்ஷ்மி மந்திரம் சொந்தங்களை நிர்வகிப்பதில் திறமை படைத்தவர்கள்.

இயற்கையிலேயே மிகவும் நேர்மையானவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள். உங்களுக்கான மந்திரம் – “ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் மஹா லக்ஷ்மி நமஹா

துலாம் ராசி

துலாம் ராசிக்கான லக்ஷ்மி மந்திரம் இவர்கள் மிகவும் கவர்ச்சியானவர்கள், அழனானவர்கள் மற்றும் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள்.

நேர்மை, நீதி ஆகியவை இவர்களின் முக்கிய குணமாகும். உங்களுக்கான மந்திரம் – “ஓம் ஸ்ரீம் ஸ்ரீ ஐ நமஹா”

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்கான லக்ஷ்மி மந்திரம் வாழ்க்கையின் இளம் பருவத்தில் ஏராளமான துன்பங்களை அனுபவிக்கும் விருச்சிக ராசியினர் உங்கள் 28 வயதைக் கடக்கும் போது அனைவரும் மிகவும் ஆச்சர்யப்படுவார்கள். உங்களுக்கான மந்திரம் – “ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் லக்ஷ்மிபயோ நமஹா ”

தனுசு ராசி

தனுசு ராசிக்கான லக்ஷ்மி மந்திரம் தேவகுரு ப்ரஹஸ்பதியின் எல்லா அம்சங்களும் நிறைந்தவர்கள் தனுசு ராசியினர். மிகவும் வெளிப்படையானவர்கள்.

நண்பர்கள் மத்தியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக் கூடியவர்கள். உங்களுக்கான மந்திரம் – ” ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே பிரசீத பிரசீத, ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மகாலக்ஷ்மியே நமஹா”

மகர ராசி

மகர ராசிக்கான லக்ஷ்மி மந்திரம் மிகவும் புத்திசாலியான மகர ராசியினர், பொறுமைக்கும் கடின உழைப்புக்கும் பெயர் போனவர்கள். காயம் அல்லது விமர்சனம் போன்றவற்றால் இவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.

உங்களுக்கான மந்திரம் – “ஓம் ஸ்ரீம் ஹ்ரிங் கிளிங் ஐங் சவ்ங் ஓம் ஹ்ரிங் க எ ஈ ல ஹ்ரிங் சகல் ஹ்ரிங் சவ்ங் ஐங் க்ளிங் ஹ்ரிங் ஸ்ரிங் ஓம் ”

கும்ப ராசி

கும்ப ராசிக்கான லக்ஷ்மி மந்திரம் கும்ப ராசியினர் சுதந்திரமானவர்கள், ஊக்கமுடையவர்கள் மற்றும் பிடிவாத குணம் கொண்டவர்கள். எதையும் பாதியில் விடும் தன்மை இல்லாதவர்கள்.

உங்களுக்கான மந்திரம் – ஐம் ஹ்ரீம் ஷ்ரீம் அஷ்டலக்ஷ்மியே ஹ்ரீம் ரிம் சித்வையே மம் க்ரிஹா ஆக்சாக் நமாஹ் ஸ்வாஹா

மீன ராசி

மீன ராசிக்கான லக்ஷ்மி மந்திரம் : மீன ராசியினர் உணர்ச்சி வசப் படக் கூடியவர்கள். கூச்ச சுபாவம் கொண்டவர்கள். கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்கள்.

எந்த ஒரு செயலையும் அன்புடன், பொறுமையுடன் கவனமாக செய்வார்கள். உங்களுக்கான மந்திரம் – ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலையே பிரசீத பிரசீத ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மகாலக்ஷ்மியே நமஹா”

Facebook Comments