மாரவில உப தபால் அதிபர் மீது தாக்குதல்!

மாரவில – ஹத்திட்டிய பகுதியில் வீட்டின் மின்சாரம் துண்டிக்கப்பட்டமையினால் உப தபால் அதிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாவனையாளர் ஒருவர் தனது வீட்டின் மின் கட்டணத்தைச் செலுத்திய போதும், மின்சாரம் துண்டிக்கப்பட்டமையினால் நேற்று (திங்கட்கிழமை) இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ஹத்திட்டிய உப தபால் அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளமை பொலிஸாரின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இருந்த போதும் இத்தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments