ஒஸ்கார் விருதை திருடியவர் கைது!!

ஒஸ்கார் விருதை திருடியவர் கைது!!

ஒஸ்கார் விருது விழா கொண்டாட்டத்தின் போது சிறந்த நடிகைக்கான விருதை திருடிய நபரைப் பொலிஸார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸில் நடந்த இந்த விழாவில் கலந்து கொண்ட டெர்ரி பிரையண்ட் என்பவர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்ற பிரான்ஸஸ் மெக்டோர்மெண்டின் விருதைத் திருடினார்.

நிகழ்வை ஒளிப்படம் பிடித்துக் கொண்டிருந்த ஒரு நபர் தாம் எடுத்த ஒரு படத்தில் விருதுக்கு தொடர்பில்லாத நபர், ஒஸ்கர் விருதை வைத்திருப்பதைக் கண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் கூறினார்.

இதை அடுத்து அவரிடம் இருந்து விருதைத் திரும்ப பெற்ற பொலிஸார் நடிகை மெக்டோர்மெண்டிடம் விருதை ஒப்படைத்ததுடன், குறித்த நபரைக் கைது செய்தனர்.

Facebook Comments