நடமாடும் தெய்வம் வீட்டிலிருக்க நீ கோவில் குளம் அலைவது எதற்கு!

இன்று உலகளாவிய ரீதியில் மகத்தான சாதனைகள் படைத்த மாமனிதர்கள் இருக்கின்றனர். அவர்களின் வெற்றிகளுக்கு பின்னால்

எந்தவொரு பெண்ணுக்கும் தாய்மை அடைதலை தவிர இந்த உலகத்தில் மேலான ஒரு பாக்கியம் இருக்க போவதே இல்லை.

ஆயினும் பிள்ளையை வளர்த்தெடுப்பது மிகுந்த கஷ்டங்கள் நிறைந்த காரியம் ஆகும்.

ஆனால் பிள்ளை காட்டுகின்ற அன்பை உணர்கின்றபோது இக்கஷ்டங்கள் எல்லாம் தாய்க்கு ஒரு பொருட்டாகவே இராது.

ஒரு பெண் தொழில் செய்வதன் மூலம் அதிஷ்டத்தை சம்பாதிக்க முடியலாம். ஆயினும் நல்ல அம்மா என்கிற அங்கீகாரத்துக்கு அது ஈடு ஆகாது.

எந்தவொரு நபரை எடுத்தாலும் அவருடைய பசுமை நிறைந்த நினைவுகள் என்ன? என்று கேட்டால் குழந்தை பருவத்தில் அம்மாவுடன் இருந்த காலங்களையே நினைவூட்டி கூறுவார்.

தாய் குழந்தையை வளர்ப்பதுதான் உலகிலேயே மிக மிக பெறுமதியான தொழில் ஆகும். ஆனால் இத்தொழிலுக்கு சம்பளமாக பணம் கிடைக்க போவதில்லை. குழந்தையின் கள்ளம் கபடம் அற்ற அன்பு கிடைக்கும்.

தாய் அவரின் உயிரை பணயம் வைத்தே குழந்தையை பிரசவிக்கிறார். அதை தொடர்ந்து அவர்கள் செய்கின்ற தியாகங்கள் இன்னும் ஏராளம்.

அவரின் நலன், ஆரோக்கியம், பணம் ஆகியவற்றை இழந்து குழந்தையை வளர்க்கின்றார். அவருடைய குழந்தைக்கு உணவூட்ட உணவு வேண்டும் என்றால் அவர் பட்டினி கிடந்து அந்த உணவை ஊட்டுவார்.

தாய்தான் ஒவ்வொரு மனிதரும் சந்திக்கின்ற முதல் பெண். இந்த பெண்ணின் அன்பை வேறு எந்த பெண்ணாலும் எப்போதும் கொடுக்கவே முடியாது.

தாய்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் முதலாவது குரு. தாய்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வின் முன்னுதாரணம். தாயை போல பிள்ளை நூலை போல சேலை என்பது பழமொழி ஆகும்.

ஒரு மனிதன் நல்லவனாக இருக்கின்றான் என்றால் அதற்கு காரணம் அவனுடைய அம்மாவின் வளர்ப்பு ஆகும்.

இன்று உலகளாவிய ரீதியில் மகத்தான சாதனைகள் படைத்த மாமனிதர்கள் இருக்கின்றனர். அவர்களின் வெற்றிகளுக்கு பின்னால் அவர்களின் அம்மாக்கள் உள்ளனர் என்று அம்மனிதர்கள் உருக்கமாகவும், பெருமையுடனும் கூறுகின்றார்கள்.

Facebook Comments