சற்றுமுன் வவுனியாவில் கோர விபத்து! இளைஞன் பலி!

சற்றுமுன் வவுனியா விநாயகபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது,

இன்று இரவு (25.01.2018) மேசன் வேலைக்கு சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அரபாத் நகர் பகுதியை சேர்ந்த சஜா என்கின்ற 28 வயதுடைய இளைஞன் வேகக் கட்டுப்பபாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியானதாக அறியப்படுகிறது

இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

Facebook Comments