இரு டிப்பர்  வாகனங்களுடன் மோதிய வான்  ஒருவர் பலி இருவர் காயம்

கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதோடு. இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து இன்று அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்களுடன் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வான் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இச் சம்பத்தில் ஹயஸ் வாகன சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதோடு, டிப்பர் சாரதி மற்றும் ஹயஸ் வாகனத்தில் பயணி்த்த நபர் ஒருவரும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Facebook Comments