சிரியாவில் குண்டு வெடிப்பு! 8 பேர் உயிரிழப்பு!

11

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பில் சிக்கி, 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அல் பாத் பல்கலைக்கழகத்துக்கு அருகில் இன்று (செவ்வாய்க்கிழமை) குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

பயணிகள் பேருந்தொன்றிலேயே, குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக, ஹோம்ஸ் மாகாண ஆளுநர் தலால் பராஸி தெரிவித்துள்ளார்.

இந்தப் பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர், பல்கலைக்கழக மாணவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

Facebook Comments