8ஆவது ஜனாதிபதி தேர்தளுக்கு 5,800 விஷேட பேருந்து சேவைகள்!

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊரிற்கு செல்லும் மக்களுக்காக விஷேட பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, 5,800 பேருந்துகள் போக்குவரத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து 1,500 விஷேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து பொறுப்பதிகாரி பி.எச்.ஆர்.ஜே சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

Facebook Comments