48 MP சுழலும் மூன்று கமெராக்களுடன் Samsung Galaxy A80.

48 MP சுழலும் மூன்று கமெராக்களுடன் Samsung Galaxy A80.

Samsung Sri Lanka தமது புதிய Galaxy A80 இனை அறிமுகப்படுத்தி வைத்தது. 48 மெகாபிக்சல்களுடன் உலகின் முதலாவது சுழலும் மூன்று கமெராக்களைக் கொண்ட ஸ்மார்ட் ஃபோனாக இது விளங்குகிறது.

நேரடித் தன்மையினை பெரிதும் விரும்புவோரைக் கொண்ட இக்காலத்திற்கு (Era of Live) ஏற்றதாக இந்த smartphone விளங்குகிறது. லைவ் தன்மையின் மூலம் மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள அல்லது ஈடுபடுவதற்கு ஏற்றவாறு இந்த smartphone வடிவமைக்கப்பட்டடுள்ளது.

உடனடியாக எடுக்கப்படும் படங்கள், லைவ் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்தல், தற்போது நடைபெறும் சம்பவங்களை உடனுக்குடன் நேரடியாக தொடர்பில் இருந்த வண்ணம் பகிரும் அனுபவத்தினையும் இது வழங்குகிறது. நாம் இப்பொழுது ளநடகநை எடுக்கும் காலத்திலிந்து லைவ் இல் இருக்கும் காலத்துக்கு நகருகிறோம்.

இங்கு மக்கள் உண்மையான மற்றும் அர்த்தமுள்ள தொடர்புகளை வளர்க்கின்றனர். இந்த புரட்சிகரமான Galaxy A80 ஆனது பல புத்தாக்கங்களை உங்களுக்கு வழங்குpறது: கட்டியிழுக்கும் full-screen display, உடன் Galaxy A80 ஆனது முதலாவது சுழலும் மூன்று கமெராக்கள் மற்றும் intelligent battery இனையும் கொண்டுள்ளது.

“நுகர்வோரை மையப்படுத்தியே நாம் அனைத்தையும் செய்கிறோம். அத்தோடு அவர்களும் அவர்களது குறிப்பிட்ட வாழ்க்கை முறைக்கும் தரத்துக்கும் ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட சாதனங்களைத் தேடுகின்றனர்.

எமது தேர்ச்சி பெற்ற வல்லுனர்களுடன் உலகளாவிய ரீதியான இயலுமை, வளமான நுகர்வோர் எண்ணங்கள் என்பன Samsung இனரான எம்மை அனைவருக்கும் புத்தாக்கத்தினை வழங்கிடும் ஒரு தனித்துவமான இடத்தில் நிலைபெறச் செய்துள்ளது.” என Samsung Sri Lankaவின் முகாமைத்துவப் பணிப்பாளரான கெவின் யூ தெரிவித்தார்.

Galaxy A Series ஆனது வேறுபட்ட தெரிவுகளைக் கொண்ட மொடல்களைக் கொண்டுள்ளதனால் ஒவ்வொருவரும் அவர்களது தனிப்பயனாக்கப்பட்ட தேவைகளுக்கேற்ப சாதனத்தை தெரிவுசெய்து கொள்ள முடியும். Galaxy A80 ஆனது Era of Live க்கு தேவையான பல உன்னத அம்சங்களை வழங்குகிறது.

நீங்கள் காணும் விதத்திலேயே உலகத்தை படம் பிடித்திடுங்கள்
Galaxy A80, சுழலும் மூன்று கமெராக்களைக் கொண்டதனால் உலகை எல்லையற்ற விதத்தில் படம் பிடித்திட உதவுகிறது.

பாவனையாளர் camera app இல் selfie mode இனை தெரிவுசெய்யும் போது மூன்று கமெராக்களும் தன்னியக்கமாக ஃபோனின் பின் பக்கத்தால் வெளியே வந்து சுழலும். இப்புத்தாக்கமிக்க கமெரா தொழில்நுட்பமானது தன்னிகரற்ற அதே மூன்று கமெரா அனுபவத்தினை அதே உயர் தெளிவுடன் வழங்குகிறது. இதன் முன் பக்க மற்றும் பின் பக்க லென்ஸ்கள் உயர் தெளிவினை வழங்குவதால் எடுக்கப்படும் படத்தின் தரத்தில் ஒரு குறையும் இருக்காது.

48MP பிரதான கமெராவுடன் நுகர்வோருக்கு வேறுபட்ட படங்களை தற்போது எடுத்திட முடியும். Galaxy A80 யின் 3D Depth camera ஆனது Live Focus videos இனை வழங்குவதுடன் பொருட்களை, அதன் அளவுகளை தெரிந்துகொள்ள ளஉயn செய்கிறது. Ultra Wide angle lens உடன் தயாரிக்கப்பட்டுள்ளதனால் மனிதரின் பார்வையை ஒத்த காட்சியையும் வழங்குகிறது.

Super Steady video mode ஆனது pro-level action வீடியோக்களை அசைவுகள், சலனங்கள் அற்ற விதத்தில் எடுக்க உதவுகிறது. அத்தோடு மற்றைய intelligent camera வானது Scene Optimizer இனை கொண்டுள்ளது. இது 30 விதமான காட்சிகளை கண்டறிந்து அவற்றை மேம்படுத்துகிறது. இதன் மூலம் அதிலுள்ள குறைபாடுகளை தாமாகவே கண்டறிந்து கிளிக் செய்ய முன் சரிசெய்கிறது. இதனால் நீங்கள் உன்னதமான படங்களை தவறவிடாது அழகாக எடுத்துக் கொள்ள முடியும்.

அதிவேக மல்டிமீடியா அனுபவம்
சுழலும் மூன்று கமெராக்களுடன்; Samsung இன் முதலாவது புதிய Infinity Display இன் மூலம் தடையற்ற காட்சிகளை அனுபவித்திட முடியும். 6.7-inch FHD+ Super AMOLED screen இனைக் கொண்டுள்ளதுடன் Galaxy A80, பல்வேறுபட்ட தகவல்களை தெளிவாக வழங்குகிறது. game, வீடியோ, படங்கள் மற்றும் கதைகளில் உங்களை முழுமையாக மூழ்கடிக்கச் செய்கிறது.

Galaxy A80 இன் Dolby Atmos, ஆனது earphones அல்லது Bluetooth speakers இனை பயன்படுத்தும் போது 360 பாகை பார்வையாளர் அனுபவத்தினையும் உங்களுக்கு வழங்குகிறது.

நீண்ட நேரத்துக்கு இணைந்திருங்கள்
Galaxy A80 யின் 3,700mAh battery மற்றும் 25W உடனான Super-Fast Charging நீண்ட நேரத்துக்கு உங்களை இணைப்பில் வைத்திருக்க உதவுகிறது. இதனால் மிக வேகமாக உங்கள் ஃபோன் ச்சார்ஜ் ஆகி விடுவதுடன் எதையும் இழக்கச் செய்யாமல் உங்களுக்கு முழுச்சுதந்திரத்தையும் அளிக்கிறது.

Galaxy A80 இன் intelligent battery ஆனது உங்கள் வழக்கமான வாழ்க்கை முறையினையும் பயன்பாட்டினையும் கற்றுக் கொண்டு அதற்கேற்ப தொலைபேசியின் மின்நுகர்வுகளை மேம்படுத்துகிறது. intelligent battery ஆனது தேவையான சிறந்த செயற்திறனுக்காக மிகவும் திறமையாக இயங்குகிறது என உறுதியளிக்க உதவுகிறது.

உங்களுக்கு தேவையானதை, தேவையான போது பாதுகாப்பாக அணுகிட உதவுகிறது
Galaxy A80 இன் Intelligent Performance Enhancer ஆனது AI-powered performance optimization software இனைக் கொண்டுள்ளது. இது உங்கள் சாதனத்தின் battery, CPU மற்றும் RAM என்பவற்றை சரிசெய்ய உதவுகிறது. உங்கள் தனித்துவமான பாவனைக்கு ஏற்ப உங்கள் தொலைபேசியினை கடினமாக வேலை செய்ய வைப்பதுடன் பயன்பாட்டினை விரைவாக்கிடவும் உதவுகிறது.

Bixby Routines உங்கள் பயன்பாட்டு முறைகளை கற்றுக் கொள்வதன் மூலமும் உங்கள் பழக்கவழக்கங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலமும் உங்களை தொடர்ந்து கண்காணிக்க உதவுகிறது. இதன் மூலம் உங்களுக்கு தேவையான அம்சங்களை உங்களுக்குத் தேவையான போது வழங்கிடவும் உதவுகிறது. உதாரணமாக ட்ரைவ் செய்தல், வேலையில் இருத்தல் போன்ற உங்கள் வழக்கமான நடைமுறைகளை கற்றுக் கொண்டு Bixby Routines, உங்கள் அன்றாட பணிகளை தானியங்குபடுத்துகிறது.

Samsung Knox இனால் பலப்படுத்தப்பட்ட Samsungஇன் பாதுகாப்பு தளம் – defense-grade security platform ஆனது chipset இல் இருக்கும் மென்பொருளினை பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் Galaxy A80 யினை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பாவிக்க முடியும். biometric authentication இனை பயன்படுத்தி apps மற்றும் வலைதளங்களை பாதுகாப்பாக அணுகிட முடியும்.

இது எளிதான பயன்பாட்டினை வழங்குவதுடன் கைரேகை ஸ்கேனர் – fingerprint scanner திரையில் பதிக்கப்பட்டுள்ளதால் அதன் மூலம் தங்கள் தொலைபேசிகளை திறந்து கொள்ளவும் முடியும்.

மக்களின் அவசரமான வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்திட Galaxy A80 ஆனது button-
activated அல்லது hands-free Bixby யினை உள்ளடக்கியுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு தேவையான தகவல்களை மிக வசதியாக இணைப்பில் பெற்றுக் கொள்ள முடியும். Bixby Vision, Bixby Home மற்றும் Reminder போன்ற அம்சங்களினையும் பாவனையாளர்களுக்கு மிக இலகுவாக பயணம் செய்யும் போதும் அணுகிட முடியும். அத்தோடு Galaxy A80 ஆனது Samsung Health மற்றும் மேலும் பல முக்கியமான Galaxy அனுபவங்களினையும் கொண்டுள்ளது.

நேர்த்தியான வடிவமைப்புடன் உங்கள் ஸ்டைலினை வெளிப்படுத்துங்கள்
Galaxy A80 யினை கொள்வனவு செய்வதில் ஆர்வமுள்ளோர் 2019, ஜூலை 10 – 21ஆம் திகதி வரை ரூ. 118,990 என்ற விலையில் JKOA, Softlogic, Singer, Singhagiri, Daraz.lk, WOW.lk, Click&shop.lk, Takas.lk ஆகிய அங்கிகாரம் பெற்ற முகவர்களிடம் முற்பதிவுகளைச் செய்துகொள்ளலாம்.

அத்துடன் JBL GO 2 Bluetooth speaker இனையும் இலவசமாக பெற்றுக் கொள்ளவும் முடியும். Dialog மற்றும் Mobitel பிணைய கூட்டாளர்கள். Ghost White மற்றும் Phantom Black ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கப்பெறுகின்றன. Ghost White தெரிவானது நீல நிற அம்சங்களையும் கொண்டுள்ளதால் ஒளி மாற்றங்கள் மற்றும் அதன் பிரதிபலிப்பினைப் பொறுத்து வேறுபட்ட தோற்றத்தைத் தந்திடும்.

Galaxy A80 யின் வசதியான, பணிச்சூழலுக்கு ஏற்ற கைக்கடக்கமான வகையிலான நேர்த்தியான வடிவமைப்பு பயணத்தின் போதும் எளிதாக பயன்படுத்த உதவுகிறது.

Samsung க்கு பிரான்ட் ஃபினான்ஸ் மற்றும் LMD ஆகியவற்றினால் “அதிகளவு விரும்பப்படும் இலத்திரனியல் வர்த்தக நாமம் 2019” விருது வழங்கப்பட்டிருந்தது. SLIM-நீல்சன் மக்கள் விருதுகள் 2019 இல் ஆண்டின் சிறந்த இளைஞர் தெரிவைப் பெற்ற வர்த்தக நாமம விருதும் வழங்கப்பட்டிருந்தது.

2019, ஏப்ரலில் ளுவயவ ஊழரவெநச இனால் வெளியிட்ட சந்தைப் பங்கின் அடிப்படையில், Samsung ஆனது இலங்கையில் முதலாம் இடத்தைப் பிடித்துள்ள ஸ்மார்ட் ஃபோன் வர்த்தக நாமமாக திகழ்கிறது.

Facebook Comments