111 வயது தாத்தா தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்!

111 வயது தாத்தா தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்!

டெல்லியில் மிகவும் வயது முதிர்ந்த வாக்காளரான 111 வயதுடைய பச்சன் சிங், வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.

குறித்த தேர்தலில் வாக்களிப்பதற்காக தேர்தல் அதிகாரிகளுடன் வீட்டிலிருந்து காரில் வருகை தந்த அவர், பின்னர் சக்கர நாற்காலியின் உதவியுடன் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பச்சன் சிங் தெரிவித்துள்ளதாவது, “எங்களுக்கு சேவை செய்கின்றவர்களுக்கு நான் வாக்களித்து வருகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1951ஆம் ஆண்டிலிருந்தே எந்ததொரு தேர்தலையும் தவறவிடாது பச்சன் சிங் வாக்களித்து வருகின்றார்.

இதேவேளை இவருக்கு டெல்லி முதலமைச்சராக யார் இருக்கின்றார் என்பது கூட தெரியாதென அவரது மகன் ஜஸ்பீர் சிங் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments