வெளியாகிறது ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் அகலாதே பாடல்.

போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் பாடல் காணொளி நாளை (வியாழக்கிழமை) வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இத்திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் மூன்று பாடல்கள் வெளியாகி நிலையில் தற்போது அடுத்த படலான ‘அகலாதே’ பாடலின் லிரிகஸ் காணொளி நாளை வெளியாகவுள்ளது.

படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ/ஏ’ தரச்சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இந்த படம் ஒகஸ்ட் 8 ஆம் திகதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

இத்திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார்.

இவர்களுடன் ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் ஆண்ட்ரியா, அபிராமி, உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைகக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

Facebook Comments