வெடிப் பொருட்கள் தொடர்பில் தகவல் வழங்கியவருக்கு 50 இலட்ச அன்பளிப்பு.

வெடிப் பொருட்கள் தொடர்பில் தகவல் வழங்கியவருக்கு 50 இலட்ச அன்பளிப்பு.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கிய வாகனச் சாரதிக்கு 50 இலட்சம் ரூபா நிதி அன்பளிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார்.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவருக்கான பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

பதில் கடமை பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவும் இந்த நிகழ்வில் பங்குபற்றினார்.

Facebook Comments