விஸ்வாசம் முதல் காட்சி வெளியீடு – அஜித் ரசிகர்கள் மோதல்!

விஸ்வாசம் திரைப்படத்தின் முதல் காட்சி வெளியீடு – அஜித் ரசிகர்கள் மோதல்!

அஜித் நடிப்பில் இன்று (வியாழக்கிழமை) வெளியாகி இருக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் முதல் காட்சியை பார்க்க சென்ற அஜித் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘விஸ்வாசம்’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கின்றது.

இந்நிலையில், அதிகாலை 4 மணி காட்சிக்கு ரசிகர்கள் திரையரங்க்குள் சென்ற போது, வேலூர் ஓல்டு டவுனை சேர்ந்தவர் பிரசாத் (வயது 20). இவரது உறவினர் ரமேஷ் (30) இருவரும் அஜித் ரசிகர்கள். பிரசாத்துக்கும் மற்றொரு தரப்பில் வந்த அஜித் ரசிகர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் கொபம்மடைந்த அந்த கும்பல் கத்தியால் பிரசாத், ரமேஷ் ஆகியோரை தாக்கினர். இதனால் திரையரங்குகளில் கடும்பதட்டம் ஏற்பட்டது.

காயமடைந்த 2 பேரையும் பொலிஸார் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையலி, கத்தியால் குத்திய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments