விஷால் ஒரு குளத்து ஆமை: ராதாரவி

விஷால் ஒரு குளத்து ஆமை என நடிகர் ராதாரவி இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளார்.

விஷாலிற்கு எதிரான தயாரிப்பாளர்களின் உள்ளிருப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைவராக இருக்கிறார். நடிகர் சங்கத்திலும் பொதுச்செயலாளராக பதவி வகிக்கிறார். அவர் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு நாம் எமது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம்.

தேர்தலில் போட்டியிடும் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். அதுவரை சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும்.

விஷால் ஒரு குளத்து ஆமை மாதிரி, நல்ல இடமாக இருந்தால் அங்கு சென்று அந்த இடத்தை கெடுத்துவிடுவார். அரசியல் ரொம்ப கஷ்டமானது. எனவே தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேவையானவற்றை அவர் செய்ய வேண்டும் என்பதே விஷாலுக்கு எனது அறிவுரை” என நடிகர் ராதாரவி மேலும் தெரிவித்துள்ளார்.

Facebook Comments