விஷம் வைத்து கொல்லப்பட்ட அருகிவரும் கழுகுகள்!

விஷம் வைத்து கொல்லப்பட்ட அருகிவரும் கழுகுகள்!

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியான கோலன் ஹைட்ஸில் எட்டு கழுகுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன.

இது அந்த பகுதியிலுள்ள மொத்த கழுகுகளின் எண்ணிக்கையில் அரைவாசி என கூறப்படுகின்றது.

கிரிஃபான் எனும் வகையை சேர்ந்த இந்த கழுகுகள், கடந்த வெள்ளிக்கிழமை காலை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலின் இயற்கை மற்றும் பூங்காக்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

எந்த விதமான விஷம் கொடுத்து, எப்படி கழுகுகள் கொல்லப்பட்டன என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் எல்லையோர பகுதிகளில் கடுமையாக வீழ்ச்சியடைந்து வரும் கழுகுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

Facebook Comments