வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் ஆரம்பம்!

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இருந்து அனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்கு பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 100 வாக்களிப்பு நிலையங்களில் 89538 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் சுமார் 1750 கும் மேட்பட்ட அரச ஊழியர்களின் பங்களிப்பில் மாவட்ட செயலகத்தில் இருந்து பொலிஸ் பாதுகாப்புடன் இன்று (15.11.2019) காலை எடுத்து செல்லப்பட்டுள்ளன என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரும் தேர்தல் அத்தாட்ச்சியாளருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
Facebook Comments