வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த பொலிஸாரின் புதிய யுக்தி

வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த பொலிஸாரின் புதிய யுக்தி

போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்கான புதிய யுக்தியொன்றை இன்று வவுனியாவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஏ9 பிரதான வீதியில் பொலிஸ் அதிகாரிகளின் உருவங்களையொத்த பொம்மைகளை வடிவமைத்து வீதியோரங்களில் பொருத்தியுள்ளனர்.

இவ்வாறு பொருத்தப்பட்ட பதாகைகள் வாகன சாரதிகளுக்கு பொலிஸ் அதிகாரியொருவர் நிற்பது போன்று காட்சியளிப்தனால் வாகனங்களின் வேகத்தை குறைப்பதோடு இந்த வேகத்தினால் இடம்பெறும் விபத்துக்களையும் குறைத்துக் கொள்ள முடியும் என எதிர்பார்த்துள்ளனர்.

Facebook Comments