வவுனியாவில் கோவிலுக்கு சென்ற பெண்ணின் சங்கிலி அபகரிப்பு.

வவுனியாவில் கோவிலுக்கு சென்ற பெண்ணின் சங்கிலி அபகரிப்பு.

வவுனியாவில் கோவிலுக்கு சென்ற பெண்ணின் தங்கசங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் ஒன்று வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் நேற்று (13.07) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா தாண்டிக்குளத்திலுள்ள வயோதிப பெண் தனது வீட்டிலிருந்து அப்பகுதியிலுள்ள ஐயனார் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத இரு நபர்கள் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்து சென்றுள்ளனர்.

சம்பவத்தில் நிலை குலைந்த பெண் செய்வதறியாது கூக்குரலிட அவ்விடத்தில் இளைஞர்கள் ஒன்று கூடியதையடுத்து தங்கச்சங்கிலியை அவ்விடத்தில் போட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

அறுக்கப்பட்ட தங்கசங்கிலி இரண்டு பவுண் மதிப்பிலானது என்று கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தபட்டு சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் தங்க சங்கிலியை அறுத்துவிட்டு தப்பித்து சென்ற இளைஞர்களை அப்பகுதியிலுள்ள சிசிரீவி கேமராவின் உதவியுடன் தேடுதல் வேட்டையை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments