வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம்!

வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம்!

வவுனியா மடுகந்த பொலிஸ் பிரிவிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மடுகந்த, மயிலங்குளம் பகுதியில் குளத்துடன் காணப்படும் வயல் கிணறு ஒன்றிலிருந்து மாடு மேய்ப்பதற்குச் சென்ற இளைஞர் ஒருவர் உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட சடலம் ஒன்றினை அவதானித்துள்ளார்.

இதையடுத்து மடுகந்த பொலிசாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற மடுகந்த பொலிசார் சடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த ஆண் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் தொடர்பாக தகவல்கள் எதுவும் பொலிசாருக்குக் கிடைக்கவில்லை, உயிரிழந்தவர் 45 தொடக்கம் 55 வயதிற்குட்பட்டவராக இருக்கலாம் என்று தெரிவித்த பொலிசார் உயிரிழந்தவரை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.

இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை மடுகந்த பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments