வருட இறுதிக்குள் வங்கிக்கடனுக்கான வட்டி வீதம் குறைவடையும்.

இந்த வருட இறுதியில் வங்கி கடனுக்கான வட்டி வீதம் 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயனிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

காணி மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஃறூப், எம்.எஸ்.தௌபீக், கே.துரைரட்ணசிங்கம், இம்ரான் மஹ்ரூப், சந்திப் சமரசிங்க போன்றோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பத்து இலட்சம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் தேசிய வைபவத்தின் ஒரு பகுதியாக திருகோணமலை மாவட்டத்திற்கான 2050 உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலை மக்கேய்சர் மைதானத்தில் இடம் பெற்றது.

காணி உரிமையற்ற பொது மக்களுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எத்தகைய சவால்களையும் எதிர் கொள்வதற்கு தாம் உள்ளிட்ட அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்த பிரதமர் எதிர் கட்சியினர் அரசாங்கத்தக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தனர்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் கோரத்தை முன்னெடுப்பதற்கு கூட எதிர்கட்சியினரால் முடியவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

வங்கி மூலம் அறவிடப்படும் வட்டி வீதம் குறைக்கப்படுவதனால் பெரும் எண்ணிக்கையிலானோர் நன்மையடைவர். இந்த வருட ஆரம்பத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயனிகள் 166 000 பேர் இலங்கைக்கு வருகை தந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதால் சம்பவத்தை அடுத்து இந்த எண்ணிக்கை 37 000 ஆக குறைவடைந்தது. இருப்பினும் இதன் பின்னர் அரசாங்கம் முன்னெடுத்த துரிதமான வேலைத்திட்டத்தின் காரணமாக ஜுன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 63 000 ஆக அதிகரித்தது.

இந்த மாத இறுதியளவில் இத் தொகை 100 000 ஆக அதிகரிக்கும். இதே போன்று ஆகஸ்ட் மாத இறுதி அளவில் இந்த எண்ணிக்கை 125 000 ஆக அதிகரித்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

எமக்கு எதிரான எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள நாம் தயார். இருப்பினும் எதிர் கட்சியினர் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரனை தொடர்பான விவாதத்தின் போது பாரளுமன்றத்தில் கோரத்தை கூற எதிர்கட்சியினரினால் முன்னெடுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு எதிர்கட்சியினர் வங்குரோத்து நிலைக்குள்ளாகியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு சம்பவத்திற்கு பின்னர் நாம் 600 000 குடும்பங்களுக்கு சமுர்தியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டோம்.

இதே போன்று காணி உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுத்தல், ஆசிரியர் நியமணம் வழங்குதல், மகா சங்கத்தினருக்கு காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்துதல் முதலான அபிவிருத்தி பணிகள் பலவற்றை முன்னெடுத்துள்ளோம் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு தெரிவித்தார்.

Facebook Comments