லிபியக் கடலில் மூழ்கி 150 பேர் உயிரிழந்திருக்கலாம்!

லிபியக் கடலில் படகு உடைந்ததனால் 150 பேர் வரையில் நீருக்குள் மூழ்கியிருக்கலாம் என ஐ.நா தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் ரீயூனிசியக் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு கவிழ்ந்ததில் குறைந்தது 65 பேர் உயிரிழந்தனர். உயிர்தப்பிய 16 பேரை ரீயூனிசியக் கடற்படை கரைக்கு கொண்டு வந்திருந்தனர்.

2019 ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் லிபியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பாதையில் சுமார் 164 பேர் இறந்தனர் என்று ஐ.நா கூறியுள்ளது.

Facebook Comments