ரோமேனியாவின் மன்னர் மைக்கேல் காலமானார்.

ரோமேனியாவின் மன்னராக ஆட்சி புரிந்துவந்தவரும் பிரித்தானிய மகாராணி எலிஸபெத்தின் உறவினருமான மைக்கேல் (Michael I) தனது 96ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக புற்றுநோயால் அவதியுற்றுவந்த இவர், சுவிஸ்லாந்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இயற்கை எய்தியதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோமேனியாவில் மன்னராட்சி கம்பியூனிஸ்ட் அரசாங்கத்தால் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன்னராக, 1927ஆம் ஆண்டு முதல் 1930ஆம் ஆண்டுவரையும் இதன் பின்னர், 1940ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டுவரையும் இரண்டு தடவைகள் மன்னராக இவர் இருந்துள்ளார்.

பிரித்தானிய மகாராணி எலிஸபெத்தின் மைத்துனரான இவர், ரோமேனியா நாட்டின் ஆட்சியை கம்யூனிஸ்ட் அரசாங்கம் கைப்பற்றியதைத் தொடர்ந்து, 1948ஆம் ஆண்டு ரோமேனியாவிலிருந்து வெளியேறி மேற்கத்தேய நாடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments