யாழ்ப்பாணத்தில் வைரவர் ஆலயம் தரைமட்டம்!

யாழ்ப்பாணத்தில் வைரவர் ஆலயம் தரைமட்டம்!

யாழ்ப்பாணம், சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள மாவிளந்தையடி ஞான வைரவர் கோவில் நேற்று புதன்கிழமை இரவு இனம் தெரியாத கும்பல் ஒன்றினால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலயத்தில் இருந்த வைரவர் சிலை உள்ளிட்ட விக்கிரங்களையும் அக்கும்பல் களவாடி சென்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் அயலவரான முதியவர் ஒருவர் தெரிவிக்கையில் ,

அந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் , ஆலயத்திற்கு அருகில் வசிப்போர் , புலம்பெயர் தேசத்தில் வசிப்போர் என பலரின் நிதி பங்களிப்புடன் ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு கும்பாபிசேகம் செய்யப்பட்டது.

இந்நிலையிலையே ஆலயத்தினுள் புகுந்த கும்பல் ஒன்று ஆலயத்தினை முற்றாக இடித்தழித்து , ஆலய விக்கிரகங்களை களவாடி சென்றுள்ளது.

ஆலயம் இடித்தழிக்கப்பட்டு, விக்கிரகங்கள் களவாடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம். பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

Facebook Comments