யாழ்ப்பாணத்தில் வீடு நிறுத்தி விட்ட  மோட்டார் சைக்கிள் திடீர்  தீ!

யாழ். மடத்தடி சந்திக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில்  வீடு நிறுத்தி விட்ட  மோட்டார் சைக்கிள் திடீரென தீ பற்றியதால் அதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலுமொரு மோட்டார் சைக்கிளும் எரிந்து நாசமாகியது. 

அத்தோடு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைக்கும் கராஜ்ம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.இந்தச்  சம்பவத்தை அடுத்து யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் அவ்விடத்துக்கு விரைந்து  தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்தில்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.  

Facebook Comments