யாழில் உதயமான புதிய பிரதேச சபை செயலகம்!

யாழில் உதயமான புதிய பிரதேச சபை செயலகம்!

யாழ். கோப்பாய் பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிடத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் திறந்து வைத்துள்ளார்.

மேலும், வடக்கிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் பிரதேச அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், கைதொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் உள்ளிட்டவர்கள் குறித்த கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

Facebook Comments