மெக்ஸிகோவில் விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி!

மெக்ஸிகோவில் விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி!

மெக்ஸிகோ நாட்டின் வடபகுதியில் உள்ள சிஹுவான் மாநிலத்தில் நேற்று 4 பேர் சிறிய விமானம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது திடீரென வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப் படையினர் பெண் உட்பட 4 பேரின் உடல்களை மீட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Facebook Comments