முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கிளிநொச்சியில் நினைவேந்தல்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18ஐ முன்னிட்டு நடைபெற்ற இன படுகொலையை நினைவு கூறும் வகையில் இன்று நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த நிகழ்வு இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றது.

வடமாகாண சபையின் முன்னால் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த நிகழ்வு இன்று பிற்கபல் 3.45 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது பொது சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து குறித்த குழுவினர் வவுனியா நோக்கி பயணித்தனர்.

நாளை மன்னாரில் இடம்பெற்று பின்னர் மன்னார் ஊடாக முழங்காவில் பகுதியில் குறித்த நினைவேந்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments