முன்னணி வீரரை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் றபாடா!

முன்னணி வீரரை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் றபாடா!

ஐ.சி.சி. டெஸ்ட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி தென் ஆபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் கேகிஸோ றபாடா முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக இறுதியாக இடம்பெற்ற டெஸ்ட்டில் 43 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜேம்ஸ் ஆண்டர்சன் 10% தரவரிசைப் புள்ளிகளை இழந்தமை றபாடாவுக்கு முன்னேற வாய்ப்பானது.

பாகிஸ்தானின் மொகமட் அப்பாஸ் 3 ஆவது இடத்திலும், தென் ஆபிரிக்காவின் வெர்னான் பிலாண்டர், இந்தியாவின் ஜடேஜா, பாட் கம்மின்ஸ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் 4,5,6,7 ஆவது இடத்தில் உள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய யாசிர் ஷா முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து 10-ம் இடத்தில் இருக்கிறார், நியூசிலாந்தின் நீல் வாக்னர் 13ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Facebook Comments