மனோ கணேசனும், காமினி ஜெயவிக்ரம பெரேராவும் இந்தியா விஜயம்.

மனோ கணேசனும், காமினி ஜெயவிக்ரம பெரேராவும் இந்தியா விஜயம்.

இந்தியாவில் நடைபெறவுள்ள 5ஆவது சர்வதேச இந்து- பெளத்த மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசனும் புத்த சாசன அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவும் புதுடெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவின் பீஹார் மாநிலம்- ராஜ்கிரிலில் ‘தர்ம-தம்ம மாநாடு’ என்ற தலைப்பில் புது டெல்லி இந்தியா பவுண்டேசன் நிறுவனம், இந்த இந்து- பெளத்த மாநாட்டினை நடத்தவுள்ளது.

அந்தவகையில் குறித்த மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுமாறு பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொது செயலாளரும், இந்தியா பவுன்டேசனின் ஆளுநர் சபை உறுப்பினருமான ராம் மாதவ் விடுத்துள்ள அழைப்பின் பேரிலேயே இவர்கள் இருவரும் மாநாட்டில் கலந்துக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments